வைணவப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பான அம்சங்கள் அனைத்தும் இதில் உள்ளேன் ஐயா என வரிசை கட்டி நிற்கின்றன. கண்ணமுது சாத்தமுது கரமது போன்ற வைணவத் தளிகை வழக்கு மொழிச் சொற்கள் அனைத்தும் காரணங்களுடன் cover செய்யப்பட்டுள்ளன. ஹயக்ரீவா குணுக்கு சிமிலி உப்புமா கொழுக்கட்டை தேசாவரம் சாத்தமுது சுக்கு மல்லி சாதம் புடலை குடலை துவையல் போன்ற வைணவ ஸ்பெஷல் தளிகை முறைகள் உங்களுக்காகவே! புளியோதரை ரெடிமேட் புளியோதரைப் பொடி காஞ்சிபுரம் இட்லி ததியோன்னம் மஞ்சள் பொங்கல் ஸ்ரீரங்கம் அரவணை என வாசித்தாலே ஜொள் ஊற வைக்கும் அய்யங்கார் ஸ்பெஷல்கள்!. ராமம் அலையஸ் நாமம் அலையஸ் திருமண் பற்றி வியக்க வைக்கும் விளக்கங்கள்! நகைச்சுவை தெறிக்க தெறிக்க அனுபவங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளுடன் கூடிய வயிற்றைக் கெடுக்காத வைணவ ஸ்பெஷல்கள்! சிரார்த்தம் என்னும் திவச தளிகை – காரண காரியங்கள் மற்றும் விளக்கங்களுடன் இதில் ஆஜர் யுவர் ஹானர்! பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார் வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார் வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம் வேணுவோர்க்கெல்லாம் வேப்பம் பூ ரசம் என வித விதமாய் போஜனம் பண்ண வாரீர்! 100 சமையல் குறிப்புகள் 88 வைஷ்ணவப் பாரம்பரிய தகவல்கள் இன்னும் போஜனப் பாடல் இன்னும் கல்யாணப்பாடல் இன்னும்.. ஸ்.. ஹப்பாடா.. என்று சொல்ல வைக்கும் 320 பக்கங்கள்!
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.