Vakkapatta Bhoomi / வாக்கப்பட்ட பூமி

About The Book

இயக்குனர் சுசி கணேசன் மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். 12வது வகுப்புவரை கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியிலும் B.Sc. படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியிலும் B.Tech படிப்பை சென்னை எம்.ஐ.டி- கல்லூரியிலும் முடித்தவர். எம்.ஐ.டி படிப்பில் Best Outgoing Student விருது வாங்கியவர். கல்லூரிக் காலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பிரபல இதழ்களில் மாணவ பத்திரிகையாளராகவும் பின்பு தமிழன் எக்ஸ்பிரஸ் தினமணியில் கட்டுரையாளராகவும் எழுதிய அனுபவம் கொண்டவர்.. விரும்புகிறேன் பைவ் ஸ்டார் திருட்டுப்பயலே கந்தசாமி திருட்டுப்பயலே&2 படங்களால் அதிகம் பேசப்பட்டவர் தமிழக அரசின் சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றவர். கந்தசாமி படத்தின் உட்கருத்தை மெய்பிக்கும்விதமாக உசிலம்பட்டி அருகே இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அவ்விரு கிராமங்களின் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தவர். பிறந்த ஊரிலிருக்கும் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்க ஒரு ஏக்கர் நிலம் வாங்கி கிராமத்திடம் கொடுத்து வன்னிவேலம் பட்டியில் உயர்நிலைப் பள்ளி வருவதற்குக் காரணமாக இருந்தவர்.. கனவுகளின் உயரத்தை நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டே செல்ல விரும்பும் சுசி.கணேசன் தயாரிப்பாளர் ஆக விரும்பியதும் குடும்பத்தோடு மும்பைக்கு இடம்பெயர்ந்தார். Shortcut Romeo - எனும் இந்தித் திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர். தற்போது Dil hai gray - எனும் திரைப்படத்தை இயக்கியும் முடித்திருக்கிறார். பல்வேறு கிராமங்களில் பல நாட்கள் பயணம் செய்து பல நூறு மனிதர்களை சந்தித்து தான் வாழ்ந்த 18 வருட இளம்பருவ கிராமத்து வாழ்க்ககையை ஒப்பிட்டு 32 வாரங்கள் தினமணி கதிரில் தொடராக எழுதிய தொகுப்பே இந்த ‘வாக்கப்பட்ட பூமி’.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE