அமிர்தம் என்கிற பெண் தன்னுடைய சொந்த வீட்டிற்கு சில வருடங்கள் கழித்து வருகிறாள். அவளுடைய பக்கத்து வீட்டு தோழி மூலம் தனக்கு வந்த சில கடிதங்களைப் பெறுகிறாள். தெருக்கூத்து எனும் நம் தமிழகத்தின் அரும் கலையில் மிக்க ஆர்வமுடைய அந்த பெண்ணின் கதையை கடிதங்கள் மூலம் கதாசிரியர் அழகாக கொண்டு செல்கிறார். தெருக்கூத்து கலைஞர்களின் நசிந்த வாழ்வை அவள் மீட்டெடுத்தது எப்படி? வாசிக்கப்படாத கடிதம் சொல்வது என்ன? படித்து அந்த கலையோடும் கலைஞர்களோடும் பயணியுங்கள்!நெய்வேலி பாரதிக்குமார் என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் எழுதிவரும் ச.செந்தில்குமார் என்.எல்.சி. நிறுவனம் சுரங்கத்தில் துணை முதன்மை மேலாளராக (ACM) பணிபுரிகிறார். ஆனந்தவிகடன் கல்கி குமுதம் தினமணி தினத்தந்தி தமிழ் இந்து கணையாழி திசைஎட்டும் அம்ருதா தேவி மலையாள மனோரமா இயர் புக் தினமணி கதிர் புத்தகம் பேசுது தினமணி சிறுவர் மணி தாமரை கிழக்குவாசல் நிழல் நிவேதிதா இலக்கியப் பீடம் ழ சௌந்திர சுகன் காக்கைச் சிறகினிலே உட்பட பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.