*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹390
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப் படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இஞ்சினியர் ப்ரீத்தி என்பவளுடன் சலாமியா என்கிற வினோத ராஜ்ஜியத்துக்கு பயணமாகிறான். ஏராளமாக ஒரு ராஜா தாராளமாக ஒரு ராஜகுமாரி வில்லன் ராஜகுரு என்று சலாமி யாவில் பயணிக்கும் ஆக்ஷன் நிரம்பிய சாகச ஜிலு ஜிலு கதை. 'விக்ரம்' என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான சினிமாவுக்காகவென்றே எழுதப்பட்ட இந்தக் கதை திரைப்படமாக உருவாகும்போதே ஷூட்டிங் புகைப்படங்களுடன் குமுதத்தில் தொடர்கதையாகவும் வந்து ஹிட் ஆனது.+ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும் கதை விறுவிறுப்பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது.