ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட அனுபவங்கள் உண்டு. அதுபோல தான் என்னுடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட அனுபவங்கள் பல உண்டு. அனுபவம் என்றால் என்ன?அனுபவத்திற்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா?இது போல் பல கேள்விகள் நம்முள் எழலாம்.அனுபவம் என்பது நாம் நம் வாழ்வில் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களிடம் பேசும்போதும் பழகும்போதும் அவர்களிடம் என்னென்ன விசயங்களை கற்றுக்கொள்கின்றோம் என்பதும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை எவ்வாறு உள்வாங்குகின்றோம் என்பதும் தான்.அனுபவத்திற்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா என்றால் என்னை பொறுத்தவரைக்கும் சம்பந்தம் இல்லை என்றே கூறுவேன். அனுபவம் என்பது வயதை பொறுத்தது அல்ல வாழ்க்கையின் புரிதலை பொறுத்தது.