ஒரு பெண்ணின் மனநிலையை பொறுத்து தான் அவளின் உணர்வுகளும் மனதிற்குள் ஒரு நீர் இல்லா மீனை போல தள்ளாடும். அதுவும் பிடித்தவருடன் இருக்கும் தருணத்தையோ இல்லை என்றோ ஒருநாள் அவன் செய்த ஒவ்வொரு செயலை இரசித்தும் தோன்றும் கற்பனை காதலில் தான் அவள் உணரும் காதல் போதை அடங்கியுள்ளது. காதலோ காதல் தோல்வியோ எதுவாயினும் பெண்ணின் மனதிற்குள் பிடித்தவரின் நினைவுகளோ அதிகமாக கண் முன் தோன்றி தோன்றி விளையாடும்.அது போலவே காமம் இல்லா காதலையும் காதல் இல்லா காமமும் கலந்த இரு வகை போதையை வைத்து பிடித்தவரின் மேல் வரும் காதல் உணர்வுகளை மனதிற்குள் இருந்து திருடி அதை எழுத்துக்களாக கோர்த்ததே இப்புத்தகம் விழியின் மாயைகள்இப்புத்தகம் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உணர்வை உள்ளடக்கியது