சுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில் மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக - பெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை இந்நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பறிவில்லாத ஒரு பழங்குடியினத் தலைவர். மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட தனக்கு உதவியளித்தவருக்கு நன்றி சொல்ல மறக்காத ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. பெற்றத் தந்தையையே நாதியற்றவர் என்று கூறி அவரை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்துவிடும் ஓர் அற்ப மனிதர். இது போன்ற பலவிதமான மனிதர்களை சுதா மூர்த்தி இதில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருடைய எளிய நடையும் நேரடியாக விஷயத்திற்கு வரும் பாங்கும் வாசகர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.