சமயங்களோடும் அற்புதங்களோடும் தொடர்பு கொண்ட சீர்காழிக்கு அருகில் உள்ள இன்னொரு அற்புதம்தான் யாஸீன் மௌலானா நாயகம். நபிகள் நாயகத்தின் 33வது தலைமுறையில் வரும் இந்த ஞானி தன் அறிவாலும் அற்புதத்தாலும் செய்த சேவைகளும் சாதனைகளும் மகத்தானவை.பல நேரங்களில் சேவையே சாதனையாகவும் சாதனையே சேவையாகவும் ஆனதுண்டு. அரபிகள் வியக்கும் அரபி அறிவு. தமிழர்கள் வியக்கும் தமிழறிவு. மதம் பார்க்காத மானிட சேவை. இவற்றின் மொத்த உருவம்தான் யாஸீன் மௌலானா நாயகம் அவர்களது வாழ்க்கை பற்றிய தகவல்களை முழுமையாகவும் விரிவாகவும் இணையம் முதலான பொதுவெளியில் காணமுடியவில்லை. கவிதை தத்துவார்த்த விளக்க உரைகள் பாமாலைகள் அரபு தமிழ் அகராதி என யாஸீன் நாயகத்தின் படைப்புலகம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. யாஸீன் நாயகத்தின் வாழ்வையும் சிந்தனைகளையும் சாதனைகளையும் சுருக்கமாக ஆவணப்படுத்துகிறார் நாகூர் ரூமி.இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.