*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹224
₹299
25% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
பல கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ள 'ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் ஜோஸப் மர்ஃபியிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு நீங்கள் தற்போது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே ஓரளவு சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைப் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் சரி அபரிமிதமான செல்வத்தை இலகுவாக அடைவது எப்படி என்பதை டாக்டர் ஜோஸப் மர்ஃபி பல வருடங்களாகக் கற்பித்து வரும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அணுகுமுறை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். இப்புத்தகத்தில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்ளலாம்: • முழுமையான மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ உங்களுக்கு இருக்கும் பிறப்புரிமையை எவ்வாறு செயல்படுத்துவது • செல்வம் ஏன் எப்போதும் திறமை மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றில் இருந்து முளைக்காமல் அறிவு மற்றும் புரிதலிலிருந்து வெளிப்படுகிறது • ஈர்ப்புவிதி எவ்வாறு உங்களுடைய மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் இட்டுச் செல்லும் • நன்றியுள்ள இதயம் ஏன் செல்வத்தைக் கவர்ந்திழுக்கிறது • உங்கள் வார்த்தைகளின் சக்தி எவ்வாறு உங்களுக்குச் செல்வச் செழிப்பைக் கொண்டு வந்து சேர்க்கும் ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தி குறித்து டாக்டர் ஜோஸப் மர்ஃபி 50 வருடங்களுக்கும் மேலாகச் செய்து வந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்த நடைமுறைக்கு உகந்த காலத்தால் அழிக்க முடியாத அறிவுரைகளால் நிரம்பி வழிகிறது இப்புத்தகம். உங்களுடைய செல்வச் செழிப்பின் திறவுகோல் உங்களினுள் உறைந்துள்ளது என்பதையும் உங்களுடைய அடிப்படை உரிமையாக விளங்கும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நீங்கள் அடைவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்பதையும் இப்புத்தகத்தில் நீங்கள் படிப்படியாகக் கற்றுக் கொள்வீர்கள்.