*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹277
₹399
31% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
உங்களுடைய கால்களுக்கு அடியில் இருக்கின்ற நிலத்தைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? உங்களுடைய கால்களுக்கு அடியில் இருக்கின்ற நிலம் ஒரு காலத்தில் உருண்டோடிய எரிமலைக் குழம்புக்கு அடியில் சமைக்கப்பட்டிருந்த ஒரு நிலமாக இருந்திருக்கலாம்; பிரம்மாண்டமான பனிக்கட்டியால் அழுத்தி நொறுக்கப்பட்டிருந்த ஒரு நிலமாக இருந்திருக்கலாம்; வழி தவறிய ஒரு பெரிய எரிகல் பூமியின்மீது மோதியபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் குலுங்கிய ஒரு நிலமாக இருந்திருக்கலாம்; தொடக்கக் காலத்தில் பூமியைச் சூழ்ந்திருந்த விஷ வாயுக்காளல் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்த ஒரு நிலமாக இருந்திருக்கலாம்; ஆழ்கடலின் அடிமடியில் உறங்கிக்கிடந்த ஒரு நிலமாக இருந்திருக்கலாம்; ஒரு மலையின் முகட்டில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்திருந்த ஒரு நிலமாக இருந்திருக்கலாம்; அல்லது இவை அனைத்திற்கும் ஆளாகியிருந்த ஒரு நிலமாகக்கூட இருந்திருக்கலாம். நாம் வசிக்கின்ற இந்தக் கிரகத்தின் கதையும் அதன் மேற்பரப்பில் பரவியிருக்கின்ற உயிரினங்களின் கதையும் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களையும் விஞ்சிவிடுகின்ற ஒன்று. அக்கதையில் இருக்கின்ற முடிச்சுகள் திகிலூட்டும் நாவல்களில் இடம்பெறுகின்ற பரபரப்பான திருப்பங்களை இடக் கையால் புறந்தள்ளிவிடக்கூடிய அளவுக்குப் பூடகமானவை. ஆனால் சமீபத்தில்தான் இவற்றின் மர்மங்களை நாம் முடிச்சவிழ்த்து ஒரு கோர்வையான கதையாகக் கோர்த்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய பல பத்தாண்டுக்கால கள ஆய்வுகளையும் எண்ணற்ற அறிவியல் ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலவியலாளரான ஆன்ட்ரூ எச். நோல் நம்முடைய வீடான இந்தப் பூமியின் 460 கோடி ஆண்டுக்காலக் கதையை ஒரு வரலாற்றுப் புதினம்போல நமக்குப் படைத்துள்ளார். இப்போது நம் உலகைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றப் பிரச்சனையைப் பற்றிக் குறிப்பிடவும் இந்நூலாசிரியர் மறக்கவில்லை. நம்முடைய சொந்த வீட்டின் கதையைத் தெரிந்து கொள்ளாமலேயே அதில் வசித்துக் கொண்டிருப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது!